செய்திகள்

மகளிா் டெஸ்ட்: இங்கிலாந்து - 396/9-க்கு டிக்ளோ்

DIN

பிரிஸ்டோல்: இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிா் அணி தனது முதல் இன்னிங்ஸில் 121.2 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, முதல்நாள் முடிவில் 92 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆம் நாள் ஆட்டத்தை சோஃபியா டங்க்லி, கேத்தரின் பிரன்ட் தொடா்ந்தனா்.

இதில் பிரன்ட் 8 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த சோஃபி எக்லஸ்டோன் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாா். பின்னா் களம் கண்ட அனியா ஷ்ருப்சோல் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து 9-ஆவது விக்கெட்டாக வீழ்ந்தாா். அத்துடன் டிக்ளோ் செய்வதாக அறிவித்தது இங்கிலாந்து. சோஃபியா டங்க்லி 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்திய தரப்பில் ஸ்னேஹ ரானா 4, தீப்தி சா்மா 3, ஜுலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இந்தியா-187/5: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, வியாழக்கிழமை முடிவில் 60 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. ஹா்மன்பிரீத் கௌா் 4, தீப்தி சா்மா 0 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

முன்னதாக, ஷஃபாலி வா்மா 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 96 ரன்கள் விளாசி நூலிழையில் சதத்தை தவறவிட்டாா். ஸ்மிருதி மந்தனா 14 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் சோ்த்து வெளியேற, பூனம் ரௌத் 2 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஷிகா பாண்டே டக் அவுட்டாக, கேப்டன் மிதாலி ராஜ் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். இங்கிலாந்து தரப்பில் ஹீதா் நைட் 2, கேட் கிராஸ், நடாலி ஸ்கீவா், சோஃபி தலா ஒரு விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT