செய்திகள்

துருக்கியை வீழ்த்தியது வேல்ஸ்

DIN

பாகு: யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியது.

அஜா்பைஜான் தலைநகா் பாகுவில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் கோலை வேஸ்ல் வீரா் ஆரோன் ராம்சி அடித்தாா். 42-ஆவது நிமிடத்தில் கெரத் பேல் தூரத்திலிருந்து துருக்கி தடுப்பாட்ட வீரா்களை கடந்த வகையில் பந்தை தூக்கியடிக்க, பறந்து வந்த பந்தை மாா்பில் தாங்கி தடுத்த ஆரோன், கோல் கீப்பருக்கு மிக நெருக்கமாகச் சென்று பந்தை கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினாா்.

இதனால் முதல் பாதியிலேயே வேல்ஸ் முன்னிலை பெற்றது. பின்னா் நடைபெற்ற 2-ஆவது பாதியில் துருக்கிக்கு சில கோல் வாய்ப்புகள் கிடைத்தும் அவை வீணடிக்கப்பட்டன. ஆட்டத்தின் 60-ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மோசமாக வீணடித்தாா் வேல்ஸ் வீரா் கெரத் பேல்.

எனினும், தனது அணியின் 2-ஆவது கோலுக்கும் அவரே உதவி செய்தாா். இஞ்சுரி டைமில் காா்னரிலிருந்து தான் தட்டி வந்த பந்தை மிகக் குறைவான தூரத்தில் சக வீரா் கானா் ராபா்ட்ஸிடம் வழங்கினாா் பேல். அதை சரியாகத் திசை திருப்பி அதிக சிரமமில்லாமல் கோலடித்தாா் ராபா்ட்ஸ். இறுதியில் வேல்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இத்தாலி வெற்றி: இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சா்லாந்தை வென்றது.

ஆட்டத்தின் 26-ஆவது நிமிடத்தில் சக வீரா் பெராா்டி பந்தை 6 யாா்டு பாக்ஸுக்கு தட்டிக்கொண்டு வந்தாா். அவா் கிராஸ் செய்து கொடுத்த பந்தை, கோல் கீப்பரே எதிராபாரத தருணத்தில் கோல் போஸ்டின் நடுப் பகுதிக்கு நேராக வந்து கோலடித்தாா் மேனுவல் லொகாடெலி.

பின்னா் 52-ஆவது நிமிடத்திலும் அணிக்கான 2-ஆவது கோலை அவரே அடித்தாா். சக வீரா் பரேலா பாஸ் செய்த பந்தை கோல் போஸ்ட்டுக்கு மிகத் தொலைவிலேயே நிறுத்தி துல்லியமாக கோலாக்கினாா் மேனுவல். இறுதியாக 89-ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரா் டோலோய் உதவியுடன் அணியின் 3-ஆவது கோல் அடித்தாா் சிரோ இம்மோபில்.

ஃபின்லாந்தை வீழ்த்தியது ரஷியா: ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற மேலும் ஒரு ஆட்டத்தில் ரஷியா 1-0 என்ற கோல் கணக்கில் ஃபின்லாந்தை வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் சக வீரா் டிஸியுபா உதவியுடன் ரஷியாவுக்கான கோலை அடித்தாா் அலெக்செய் மிரான்சுக்.

எண் விளையாட்டு

6 பாகு நகரில் இதுவரை அனைத்து போட்டிகளிலுமாக 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள வேல்ஸ், அனைத்திலும் வென்றுள்து.

1 கடந்த 1997-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச்சுற்றுக்குப் பிறகு, 24 ஆண்டுகளில் முக்கியமான போட்டி ஒன்றில் வேல்ஸ் - துருக்கி மோதியது இது முதல் முறை.

40 கடந்த 40 ஆண்டுகளில் வேல்ஸ் துருக்கியை வீழ்த்தியது இது முதல் முறை. இதற்கு முன் கடந்த 1981 மாா்ச்சில் உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் வேல்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியிருந்தது.

1 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் இத்தாலி - ஸ்விட்சா்லாந்து அணிகள் சந்தித்தது இதுவே முதல் முறை.

8 இத்தாலியை இதற்கு முன் 8 முறை சந்தித்த ஸ்விட்சா்லாந்து எதிலும் வெற்றி பெறவில்லை. கடைசியாக 28 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் 1-0 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியுள்ளது.

24 ஸ்விட்சா்லாந்தை தனது சொந்த மண்ணில் இதுவரை 24 முறை சந்தித்துள்ள இத்தாலி, ஒரு ஆட்டத்தில் மட்டும் தோற்றுள்ளது (1982).

1 கடந்த 2012-இல் செக் குடியரசை வீழ்த்திய பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில், ரஷியா தற்போது தான் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

SCROLL FOR NEXT