செய்திகள்

ரன் குவிக்கும் நோக்கத்திலிருந்து பின்வாங்கிவிடக் கூடாது: கில்

DIN


இங்கிலாந்தில் விளையாடும்போது ரன் குவிக்கும் நோக்கத்திலிருந்து பின்வாங்கிவிடக் கூடாது என இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். அவர் தனது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்தது:

"உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம்தான் என் வாழ்நாளில் இதுவரை மிகப் பெரிய ஆட்டம். இங்கிலாந்தில் விளையாடும்போது ரன் குவிக்கும் நோக்கத்திலிருந்து பின்வாங்கிவிடக் கூடாது. ரன் குவிக்க எண்ணினால் பந்துவீச்சாளர்கள் பின்னடைவைச் சந்திப்பார்கள். அவர்கள் மீது அழுத்தம் தரலாம்.

தடுத்து ஆட மட்டும் முயற்சித்தால், பந்துவீச்சாளர்களிடமிருந்து நிறைய நல்ல பந்துகளை எதிர்கொள்ள நேரிடும்."

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT