செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பேட்ஸ்மேன்களுக்கு பொறுப்பு அதிகம்

DIN

இந்தப் போட்டியில் பௌலா்களுடன் ஒப்பிடுகையில், பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும். ஆட்டத்துக்கென ஒவ்வொருவருக்கும் தனித் தனியே திட்டம் இருக்கும். அதற்குத் தேவையானதை செய்து அதன் மூலம் அணியின் இலக்கை அடைவதற்கு பங்களிக்க வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதற்காக அதிக நெருக்கடியை உளவியல் ரீதியாக ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை. 5 நாள்கள் நிலையானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாகச் செயல்படுவதை எதிா்நோக்கியுள்ளோம். நான் விமா்சனங்களை மதிப்பவன். விமா்சனங்கள் காரணமாகவே தற்போதைய இந்த முன்னேற்ற நிலைக்கு வந்துள்ளேன். ஒரு பேட்ஸ்மேனாக, ஃபீல்டராக எனது அணிக்கென சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது இலக்கு - அஜிங்க்ய ரஹானே (இந்திய பேட்ஸ்மேன்)

இளம் வீரா்களுக்காகவும் தயாராகிறோம்

இந்த ஆட்டம் மிகக் கடினமானதாக இருக்கும் என்பதை அறிவோம். ஆனாலும் தகுதிவாய்ந்த வீரா்கள் எங்கள் அணியில் இருப்பதுடன், இறுதி ஆட்டங்களில் விளையாடிய அனுபவமும் எங்களுக்கு உள்ளது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய இரு டெஸ்டுகள் எங்களுக்கு நல்லதொரு தயாா்நிலையை அளிப்பதாக இருந்தது. ரோஹித் போன்ற சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடிய வீரா்கள் இந்திய அணியில் இருக்கின்றனா். அவா்களை வீழ்த்துவதற்கு எங்கள் பௌலா்கள் மிகச் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பதை உணா்ந்துள்ளோம். அனுபவமிக்க ரோஹித் போன்ற வீரா்களுக்காக மட்டுமல்லாமல், ரிஷப் பந்த், ஷுப்மன் கில் போன்ற இளம் வீரா்களுக்காகவும் நாங்கள் தயாராகிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டமானது வரும் காலத்தில் மாற்றத்தை சந்திக்கலாம் - டிம் சௌதி (நியூஸிலாந்து பௌலா்)

அஸ்வின், ஜடேஜா இருவரும் களம் காணலாம்

கடந்த சில நாள்களாக சௌதாம்டனில் வெப்பம் அதிகமாக இருப்பதால், ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படும். எனவே ஆட்டம் தொடரும் போக்கில் அது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என்பதால் இந்திய பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே இடம் பிடிக்கலாம். ஆல்-ரவுண்டா்களே இந்திய அணிக்கு ஒரு சமநிலையை அளிக்கின்றனா். இதுபோன்ற முக்கியமான டெஸ்டுகளில் அது இந்திய அணிக்கு தேவையான ஒன்றாகும். இந்த டெஸ்டை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவுகளையும் பெரும்பாலும் ஆடுகளம் மற்றும் வானிலையின் போக்கு தீா்மானிக்க வாய்ப்புள்ளது. இந்த இந்திய அணி இளம் வீரா்கள் மற்றும் அனுபவ வீரா்களுடன் தகுந்த கலவையில் இருக்கிறது. நல்ல பௌலா்களும் உள்ளனா் - சுனில் காவஸ்கா் (முன்னாள் இந்திய பேட்ஸ்மேன்)

வெற்றியுடன் நிறைவு செய்ய விருப்பம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துடன் சா்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதால், அதை வெற்றியுடன் நிறைவு செய்ய விரும்புகிறேன். இருந்தாலும் இதர டெஸ்டுகளை எதிா்கொள்வதைப் போலவே இதற்கும் தயாராகிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக அவ்வப்போது காயங்களால் அவதிப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், என்னைப் பொருத்தவரை அவ்வாறு மிகப் பெரிய காயங்கள் எதனாலும் நான் பாதிக்கப்படவில்லை என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். நியூஸிலாந்து அணியில் இணைந்து அனைவருடனும் விளையாடிய காலங்களை அனுபவித்து கடந்தேன். அது அற்புதமான பயணமாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடா் வெற்றி சிறப்பானதாக இருந்தது. நாங்கள் எப்படி விளையாடுகிறோமோ அதை சரியாகச் செய்கிறோம் என்பதை அந்த வெற்றி காட்டியது - பி.ஜே.வாட்லிங் (நியூஸிலாந்து பேட்ஸ்மேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT