செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித் மீண்டும் முதலிடம்; வில்லியம்சனுக்குப் பின்னடைவு

DIN


ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலை ஐசிசி புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்மித் 891 புள்ளிகளுடனும், வில்லியம்சன் 886 புள்ளிகளுடனும் முறையே முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.

இந்திய கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கோலி தவிர்த்து ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் சர்மாவும் டாப்-10இல் உள்ளனர். இருவரும் தலா 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கின்றனர். 

பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 850 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். டாப் 10-இல் இருக்கும் ஒரே இந்தியப் பந்துவீச்சாளர் அஸ்வின்.

ஆல்-ரௌண்டர்கள் தரவரிசையில் ஜேசன் ஹோல்டர் 412 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அஸ்வின் 353 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT