செய்திகள்

மகளிர் டெஸ்ட்: இங்கிலாந்து நிதானம்

16th Jun 2021 08:46 PM

ADVERTISEMENT


இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரேயொரு டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்டாலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக லாரென் வின்பீல்ட் ஹில் மற்றும் டேமி பியூமாண்ட் களமிறங்கினர். இந்த இணை இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில் வின்பீல்ட் ஹில் 35 ரன்களுக்கு பூஜா வஸ்தராகர் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் நைட் பியூமாண்ட்டுடன் இணைந்தார்.

பியூமாண்ட் அரைசதத்தைக் கடக்க இந்த இணையும் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தது. 2-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் பியூமாண்ட் 66 ரன்களுக்கு ஸ்நே ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

கேப்டன் நைட் தொடர்ந்து நிதானத்தை வெளிப்படுத்த நாடாலி சிவர் அவருடன் இணைந்து பாட்னர்ஷிப் அமைக்கத் தொடங்கினார்.

தேநீர் இடைவேளையில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.

Tags : Womens Test Cricket
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT