செய்திகள்

ரொனால்டோவின் ஒற்றை நகர்வு: கோகோ கோலாவுக்குப் பெரும் இழப்பு

DIN


கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ கோலாவுக்குப் பதில் தண்ணீர் குடிக்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது அந்த நிறுவனத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய கால்பந்து தொடரில் ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். 

ஐரோப்பிய கால்பந்து தொடருக்கு கோகோ கோலா நிறுவனமும் ஒரு ஸ்பான்சர் என்ற அடிப்படையில் செய்தியாளர் சந்திப்பு மேசையில் இரண்டு கோகோ கோலா பாட்டில்கள் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. 

செய்தியாளர் சந்திப்புக்கு வந்த ரொனால்டோ தன் முன் இருந்த கோகோ கோலா பாட்டில்களை ஓரமாக நகர்த்திவிட்டு தண்ணீர் பாட்டிலை மேலே ஏந்தி காண்பித்தார்.

ரொனால்டோவின் இந்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

செய்தியாளர் சந்திப்பு நிறைவடைவதற்குள் கோகோ கோலாவின் பங்குத் தொகை 1.6 சதவிகிதம் சரிவைச் சந்தித்தது.

மேலும் கோகோ கோலாவின் சந்தை மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இழப்பைச் சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய மதிப்பில் ரூ. 29 ஆயிரம் கோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT