செய்திகள்

டெஸ்ட்: இங்கிலாந்தில் புதிய சாதனையை நிகழ்த்துமா இந்திய மகளிர் அணி?

DIN

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி - ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்டால் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்திய மகளிர் அணி கடைசியாக நவம்பர் 2014-ல் டெஸ்டில் விளையாடியது. 2401 நாள்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது. 

இந்திய மகளிர் அணி 1970கள் முதல் இதுவரை 36 டெஸ்டுகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 6-ல் தோற்று 25 ஆட்டங்களை டிரா செய்துள்ளது.

2002-ல் அறிமுகமான மிதாலி ராஜும் ஜுலான் கோஸ்வாமியும் இதுவரை தலா 10 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்கள். 

இந்திய அணியில் எட்டு வீராங்கனைகள் மட்டுமே டெஸ்டில் விளையாடியுள்ளார்கள். ஆனால் இங்கிலாந்து அணியில் 11 பேருக்கு டெஸ்ட் அனுபவம் உண்டு. 

நவம்பர் 2014-க்குப் பிறகு இந்திய அணி ஒரு டெஸ்டிலும் விளையாடவில்லை. ஆனால் ஆஷஸ் தொடரில் விளையாடியதால் இங்கிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடியுள்ளது.

இங்கிலாந்தில் இந்திய அணி இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று 6 ஆட்டங்களை டிரா செய்துள்ளது. ஒரு டெஸ்டிலும் தோற்றதில்லை. மொத்தமாக இரு அணிகளும் இதுவரை 13 டெஸ்டுகளில் மோதியதில் இந்திய அணி 2 டெஸ்டிலும் இங்கிலாந்து ஒரு டெஸ்டிலும் வென்றுள்ளன. 10 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 

இந்திய மகளிர் அணி கடைசியாக விளையாடிய 3 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில் கடைசியாக விளையாடிய 2 டெஸ்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்த டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தினால் தொடர்ச்சியாக நான்கு டெஸ்டுகளை வென்ற முதல் அணி என்கிற புதிய சாதனையை நிகழ்த்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT