செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாடுவார்: டாம் லதம் நம்பிக்கை

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாடுவார் என டாம் லதம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு - மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து வென்றுள்ளது. 2-வது டெஸ்டில் காயம் காரணமாக நியூசி. கேப்டன் வில்லியம்சன் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக டாம் லதம் கேப்டனாகச் செயல்பட்டார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாடுவார் என டாம் லதம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

வில்லியம்சன், வாட்லிங் ஆகியோர் காயத்திலிருந்து நன்கு மீண்டு வருகிறார்கள். இப்போது அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இதன்மூலம் முழு உடற்தகுதியுடன் விளையாட அவர்கள் தயாராக இருப்பார்கள். அடுத்த இரு நாள்களில் நடைபெறவுள்ள உடற்தகுதிப் பரிசோதனையில் அவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தின்போது அனைத்து வீரர்களும் நல்ல உடற்தகுதியுடன் இருப்பார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT