செய்திகள்

இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தரவரிசையில் நெ.1 இடத்துக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி

DIN


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டை வென்ற நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் 1-0 எனக் கைப்பற்றியுள்ளது. 

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட், பிர்மிங்ஹமில் நடைபெற்றது. 

காயம் காரணமாக நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் விலகினார்கள். இதனால் டாம் லதம் கேப்டனாகச் செயல்பட்டார். வில்லியம்சனுக்குப் பதிலாக வில் யங்கும் வாட்லிங்குக்குப் பதிலாக டாம் பிளெண்டல்லும் நியூசி. அணியில் தேர்வானார்கள். 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 101 ஓவர்களில் 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்க் வுட் 41 ரன்கள் எடுத்தார். லாரன்ஸ் 81 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணித் தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் ஹென்றி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 119.1 ஓவர்களில் 388 ரன்கள் எடுத்தது. கான்வே 80, வில் யங் 82, டெய்லர் 80 ரன்கள் எடுத்தார்கள். பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 41.1 ஓவர்களில் 122 ரன்களுக்குச் சுருண்டது. ஹென்றி, வாக்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 10.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் டாம் லதம் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார். 

2-வது டெஸ்டை வென்றதால் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரையும் நியூசிலாந்து அணி 1-0 எனக் கைப்பற்றியுள்ளது. மேட் ஹென்றிக்கு ஆட்ட நாயகன் விருதும் கான்வே, பர்ன்ஸ் ஆகியோருக்கு தொடர் நாயகன்கள் விருதும் வழங்கப்பட்டன. 

இந்த வெற்றியினால் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி. இந்திய அணி 2-வது இடத்திலும் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT