செய்திகள்

தென் ஆப்பிரிக்க வேகங்கள் மிரட்டல்: மே.இ. தீவுகள் படுதோல்வி

DIN


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 97 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக லுங்கி என்கிடி 5 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்க்கியா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக்கின் அட்டகாசமான சதத்தால் 322 ரன்கள் குவித்தது.

225 ரன்கள் பின்தங்கிய நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் திணறல் நிலையில் இருந்தது.

3-வது நாள் ஆட்டத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் மட்டும் 62 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால் மேற்கிந்தியத் தீவுகள் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் சதமடித்த டி காக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT