செய்திகள்

2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் நியூசிலாந்து (2-ம் நாள் ஹைலைட்ஸ் விடியோ)

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 2-ம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.

லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட், பிர்மிங்ஹமில் நடைபெறுகிறது. 

காயம் காரணமாக நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் விலகினார்கள். இதனால் டாம் லதம் கேப்டனாகச் செயல்படுகிறார். வில்லியம்சனுக்குப் பதிலாக வில் யங்கும் வாட்லிங்குக்குப் பதிலாக டாம் பிளெண்டல்லும் நியூசி. அணியில் தேர்வாகியுள்ளார்கள். 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ் 81 ரன்கள் எடுத்தார். லாரன்ஸ் 67, மார்க் வுட் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

2-வது நாளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 101 ஓவர்களில் 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்க் வுட் 41 ரன்கள் எடுத்தார். லாரன்ஸ் 81 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணித் தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் ஹென்றி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இதன்பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. 2-ம் நாள் முடிவில் 76.3 ஓவர்களில் 229/3 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 80 ரன்களும் வில் யங் 82 ரன்களும் எடுத்தார்கள். டெய்லர் 46 ரன்களுடன் களத்தில் உள்ளார். நியூசி. அணி 74 ரன்கள் பின்தங்கியிருந்தாலும் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளதால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் நிலையில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT