செய்திகள்

இங்கிலாந்துடனான 2-வது டெஸ்ட்: 388 ரன்களுக்கு நியூசிலாந்து ஆட்டமிழப்பு

12th Jun 2021 07:56 PM

ADVERTISEMENT


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 388 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து 85 ரன்கள் முன்னிலை வகித்துள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது.

3-ம் நாள் ஆட்டம் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், ராஸ் டெய்லர் அரைசதம் அடித்து ஆட்டத்தைத் தொடர்ந்தார். அவர் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆலி ஸ்டோன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹென்ரி நிகோல்ஸ் 21 ரன்களுக்கும், டேரில் மிட்செல் 6 ரன்களுக்கும், நீல் வாக்னர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்னர். ஹென்ரி வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்த நிலையில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சற்று தாக்குப்பிடித்து விளையாடி வந்த டாம் பிளெண்ட்வெல் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக அஜாஸ் படேலும் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

நியூசிலாந்து அணி 388 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன்மூலம் முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளும், மார்க் வுட், ஆலி ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளும், டேன் லாரன்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : Edgbaston Test
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT