செய்திகள்

6 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து டி20 அணியில் வோக்ஸ்

12th Jun 2021 08:17 PM

ADVERTISEMENT


இலங்கை டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 23-ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2015-இல் இங்கிலாந்து அணிக்காக டி20யில் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணிக்குத் திரும்பியுள்ளார். கடைசியாக 2019-இல் இங்கிலாந்து அணிக்காக டி20 ஆட்டத்தில் விளையாடிய டேவிட் வில்லியும் இலங்கை தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர்த்து கடைசியாக 2018-இல் விளையாடிய லியாம் டாசனும் தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார்.

காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ரீஸ் டாப்லே ஆகியோர் சேர்க்கப்படவில்லை. 

ADVERTISEMENT

இங்கிலாந்து அணி:

இயான் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், லியாம் டாஸன், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

இங்கிலாந்து அணி ஜூன் 19-ம் தேதி கார்டிஃபில் கூடுகின்றன.

Tags : England T20
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT