செய்திகள்

இந்திய அணிக்கு 3-வது முறையாகத் தேர்வாகியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி

11th Jun 2021 11:25 AM

ADVERTISEMENT

 

இலங்கைச் சுற்றுப்பயணத்துக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

ஐபிஎல் 2020 போட்டியில் சிறப்பாகப் பந்துவீசியதால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடருக்குத் தேர்வானார் வருண் சக்ரவர்த்தி. எனினும் காயம் காரணமாக விலகினார். பிறகு இங்கிலாந்து டி20 தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பிசிசிஐ நடத்திய உடற்தகுதிச் சோதனையில் தோல்வியடைந்தார். தனக்குக் கிடைத்த 2-வது வாய்ப்பையும் அவரால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பலருக்கும் அவர் மீது பரிதாபம் ஏற்பட்டது. 

இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவத்தி சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் 3-வது முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

இந்தமுறையாவது காயம், உடற்தகுதிப் பிரச்னைகள் இல்லாமல் இந்திய அணியின் 11 பேரில் ஒருவராக வருண் சக்ரவர்த்தி இடம்பெற்று திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Tags : Shikhar Dhawan Varun Chakravarthy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT