செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாகத் தகுதி பெற்ற வீராங்கனைகள்

11th Jun 2021 03:27 PM

ADVERTISEMENT

 

பிரெஞ்சு ஓபன் மகளிர் இறுதிச்சுற்றுக்கு பார்போராவும் அனாஸ்டாசியாவும் முதல்முறையாக முன்னேறியுள்ளார்கள்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச்சுற்றில் ரஷியாவின் அனாஸ்டாசியா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் தமராவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு மகளிர் அரையிறுதிச்சுற்றில் செக் நாட்டைச் சேர்ந்த பார்போரா, 7-5, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி கிரீஸின் மரியாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 18 நிமிடங்களுக்கு நடைபெற்றது. 

ADVERTISEMENT

நாளை நடைபெறும் மகளிர் இறுதிச்சுற்றில் பார்போராவும் அனாஸ்டாசியாவும் மோதவுள்ளார்கள். இருவரும் கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளார்கள்.  

Tags : French Open Barbora final
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT