செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் காலமானார்

10th Jun 2021 04:37 PM

ADVERTISEMENT

 

1998 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார். அவருக்கு வயது 42.

மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங், 1998 பாங்காங் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். கடந்த வருடம் கரோனாவால் பாதிக்கப்பட்ட டிங்கோ சிங் அதிலிருந்து மீண்டு வந்தார். 

2018 முதல் கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் செலவுக்காக தன்னுடைய வீட்டைக் கடந்த வருடம் விற்கவேண்டிய நிலைமை டிங்கோ சிங்குக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக இம்பாலில் இன்று அவர் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

டிங்கோ சிங்குக்கு 1998-ல் அர்ஜூனா விருதும் 2013-ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. 

டிங்கோ சிங்கின் மறைவுக்குச் சமூகவலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.  

2013-ல் பத்மஸ்ரீ விருது வென்றபோது...
ADVERTISEMENT
ADVERTISEMENT