செய்திகள்

காயத்திலிருந்து மீண்டு, டி20 ஆட்டத்தில் விளையாடும் ஸ்டோக்ஸ்

8th Jun 2021 03:41 PM

ADVERTISEMENT

 

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ், டி20 ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தாா் பென் ஸ்டோக்ஸ். ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது, பஞ்சாப் வீரா் கிறிஸ் கெயில் அடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்தாா். அப்போது அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், காயம் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 3 மாதங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட தயாராகிவிட்டார் ஸ்டோக்ஸ். தற்போது பந்துவீசவும் பயிற்சிகள் மேற்கொள்ளவும் அவரால் முடிகிறது. இதனால் அடுத்த வாரம் நடைபெறவுள்ள டி20 பிளாஸ்ட் ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் பங்கேற்கவுள்ளார். இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஸ்டோக்ஸ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

Tags : Stokes T20 game ஸ்டோக்ஸ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT