செய்திகள்

மஞ்சரேக்கரைக் கலாய்க்க 'அம்பி'யாக மாறிய அஸ்வின்

8th Jun 2021 06:37 PM

ADVERTISEMENT


ரவிச்சந்திரன் அஸ்வினை எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்று அழைப்பதில் சிக்கல் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்ததற்கு, அஸ்வின் கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்று அழைப்பதில் பிரச்னை இருப்பதாக சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்தது சமூக ஊடகங்களில் விவாதமானது.

இதைத் தொடர்ந்து, சுட்டுரைப் பக்கத்தில் விளக்கமளித்த மஞ்சரேக்கர், "எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்பது கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் உயரிய பாராட்டு. டான் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் உள்ளிட்டோர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் என்னுடைய மனதில் எக்காலத்துக்கும் சிறந்த வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். உரிய மரியாதையுடன், எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்ற பட்டியலில் அஸ்வின் இடம்பெறவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் மஞ்சரேக்கர் ட்வீட்டை மறுபதிவு செய்த அஸ்வின், அந்நியன் படத்தில் சாரியிடம் (நடிகர் விவேக் கதாபாத்திரம்) 'அப்டி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்கிற்து' என்று அம்பி  (நடிகர் விக்ரம் கதாபாத்திரம்) கூறும் மீமை பதிவிட்டுள்ளார். அஸ்வினின் இந்தக் கிண்டல் பதிலடி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

Tags : ashwin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT