செய்திகள்

இந்தியா - நியூசிலாந்து மோதும் இறுதி ஆட்டம்: நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு

8th Jun 2021 03:06 PM

ADVERTISEMENT

 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.

இந்நிலையில்  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Michael Gough Richard Illingworth umpires
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT