செய்திகள்

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது: பரிந்துரைப் பட்டியல் வெளியீடு

8th Jun 2021 05:05 PM

ADVERTISEMENT

 


மே மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி. சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம். முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமியும், ரசிகா்களுடன் இதில் இணைந்து செயல்படுவார்கள். விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் தீா்மானிக்கப்படுவாா்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

முதல் மூன்று மாதத்துக்கான விருதுகளை இந்திய வீரர்களே பெற்றார்கள். ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பந்த், பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின், மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தேர்வானார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் மே மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி. ஆடவர் பிரிவில் பாகிஸ்தானின் ஹசன் அலி, இலங்கையின் பிரவீண் ஜெயவிக்ரமா, வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள். மகளிர் பிரிவில் கேத்ரின் பிரைஸ், கேபி லூயிஸ், லியா பால் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். 
 

Tags : ICC Player of Month Hasan Ali
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT