செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய நடால், ஜோகோவிச்

8th Jun 2021 10:34 AM

ADVERTISEMENT

 

பிரெஞ்சு ஓபன் காலிறுதிச் சுற்றுக்குப் பிரபல வீரர்களான நடாலும் ஜோகோவிச்சும் முன்னேறியுள்ளார்கள். 

பிரெஞ்சு ஓபன் போட்டியை 13 முறை வென்ற நடால், 4-வது சுற்றில் 19 வயது சின்னரை 7-5, 6-3, 6-0 என நேர் செட்களில் தோற்கடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம் பிரெஞ்சு ஓபன் போட்டியில் 15 முறை காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் நடால். 

தனது 4-வது சுற்றில் கடுமையாகப் போராடி வென்றார் ஜோகோவிச். இத்தாலியின் முசெட்டியை 6-7(7), 6-7(2), 6-1, 6-0, 4-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார் ஜோகோவிச். இறுதி செட்டில் காயம் காரணமாக முசெட்டி போட்டியிலிருந்து விலகினார். பிரெஞ்சு ஓபன் போட்டியில் தொடர்ந்து 12-வது முறையாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார் ஜோகோவிச். 

ADVERTISEMENT

Tags : French Open Nadal Djokovic
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT