செய்திகள்

இங்கிலாந்தில் பந்தை சுழற்றத் தொடங்கினார் ஜடேஜா

6th Jun 2021 04:47 PM

ADVERTISEMENT


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை பயிற்சியைத் தொடங்கினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து சென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18-ம் தேதி தொடங்குகிறது. 

இந்திய வீரர்கள் தற்போது சௌதாம்ப்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சௌதாம்ப்டன் மைதானத்தில் தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். ஆடுகளத்தில் பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை ஜடேஜா சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Jadeja
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT