செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 273 ரன்கள் இலக்கு

6th Jun 2021 06:51 PM

ADVERTISEMENT


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 273 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து, 103 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் நியூசிலாந்து வீரர்கள் பெரிதளவில் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 36 ரன்கள் சேர்த்தார். ராஸ் டெய்லர் துரிதமாக விளையாடி 33 ரன்கள் சேர்த்தார். இதனால், அந்த அணி உணவு இடைவேளையில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது.

உணவு இடைவேளையில் தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்த நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு 273 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி வருகிறது.
 

Tags : Lords Test
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT