செய்திகள்

தமிழக கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளர்

31st Jul 2021 05:42 PM

ADVERTISEMENT

 

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் எம். வெங்கட்ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக டி. வாசு கடந்த 2019 ஆகஸ்டில் நியமிக்கப்பட்டார். இந்த வருடம் தமிழக அணி சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்றது. 2019-20-ல் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே போட்டிகளில் தமிழக அணி 2-ம் இடம் பிடித்தது. 

கடந்த சில வருடங்களாக ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழக அணி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. தமிழக அணி 2016-17-க்குப் பிறகு நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இதையடுத்து ஒரு மாற்றத்துக்காக  முன்னாள் வீரர் எம். வெங்கட்ரமணா, தமிழக அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளராக 2016 முதல் 2019 வரை வெங்கட்ரமணா பணியாற்றினார். 

ADVERTISEMENT

இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், ஒரு ஒருநாள் ஆட்டத்தில் வெங்கட்ரமணா விளையாடியுள்ளார். ரஞ்சி கோப்பைப் போட்டியை வெல்வதுதான் லட்சியமாக உள்ளது என அவர் பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 20 முதல் தொடங்குகிறது. முதலில் சையத் முஷ்டாக் அலி அதன்பிறகு ரஞ்சி, விஜய் ஹசாரே போட்டிகள் நடைபெறுகின்றன.

Tags : Tamil Nadu coach
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT