செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இசுரு உடானா ஓய்வு

31st Jul 2021 04:24 PM

ADVERTISEMENT


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் இசுரு உடானா சனிக்கிழமை அறிவித்தார்.

இசுரு உடானா (33) கடைசியாக இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடினார். ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் விளையாடினார். டி20 தொடரில் முதலிரண்டு ஆட்டங்களில் விளையாடினார். ஆனால், ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இந்த நிலையில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் உடானா. அடுத்த தலைமுறைக்கான வீரர்களுக்கு வழிவிட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஓய்வு குறித்த முடிவில் உடானா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | ரஷியாவில் புதிதாக 23,807 பேருக்கு கரோனா

ADVERTISEMENT

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக 2009 டி20 உலகக் கோப்பையில் அறிமுகமானார் உடானா. இதுவரை 21 ஒருநாள் ஆட்டங்கள், 34 டி20 ஆட்டங்களில் விளையாடி முறையே 18 மற்றும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் உடானாவின் பந்துவீச்சு சராசரி 52.78, டி20யில் 33.89.

பேட்ஸ்மேனாக ஒருநாள் கிரிக்கெட்டில் 237 ரன்களும், டி20யில் 256 ரன்களும் எடுத்துள்ளார். 

கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய ஒரே இலங்கை வீரர் உடானா. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக 10 ஆட்டங்களில் விளையாடிய அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரி 35.35. எகானமி 9.75.

Tags : Isuru Udana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT