செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற இடைவெளி: பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

30th Jul 2021 10:25 PM

ADVERTISEMENT

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் காலவரையற்ற இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டராக விளையாடி வருபவர் பென் ஸ்டோக்ஸ். சர்வதேச அளவில் தனது திறமையால் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ள இவர் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தார். 

1991ஆம் ஆண்டு நியூசிலாந்தில் கிறிஸ்ட்சேர்ச் நகரத்தில் பிறந்தவர் பென் ஸ்டோக். இளம் வயதில் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் பங்கேற்று விளையாடத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறி இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டராக கலக்கி வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் காலவரையற்ற இடைவெளி எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

ADVERTISEMENT

கையில் ஏற்பட்ட காயம் மற்றும் மன அழுத்தம் காரணமாக இந்தமுடிவை எடுத்துள்ளதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். 

Tags : Cricket Ben Stokes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT