செய்திகள்

இந்தியா திணறல் பேட்டிங்: இலங்கைக்கு 133 ரன்கள் இலக்கு

28th Jul 2021 09:31 PM

ADVERTISEMENT

 

இலங்கையுடனான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கினர். இந்த இணை தொடக்கத்தில் அதிரடி காட்டி விளையாடியது. அதன்பிறகு, ஆடுகளத்துக்கேற்ப பந்தின் வேகத்தை குறைத்து வீசத் தொடங்கினர் இலங்கை பந்துவீச்சாளர்கள்.

ADVERTISEMENT

இதற்குப் பலனாக இந்தியாவின் ரன் வேகம் குறையத் தொடங்கியது. பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தது.

இந்த நெருக்கடி காரணமாக இருவரும் துரிதமாக ரன் சேர்க்க முயற்சித்தனர். விளைவு ருதுராஜ் 21 ரன்களுக்கு ஷனாகா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சிக்ஸரை அடித்தாலும் ரன் ரேட் உயரவில்லை. நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாடி வந்த தவான் 42 பந்துகளில் 40 ரன்களுக்கு அகிலா தனஞ்ஜெயா பந்தில் வீழ்ந்தார்.

இதையடுத்து, இலங்கையின் சுழலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 

படிக்கல் 23 பந்துகளில் 29 ரன்களுக்கு வனிந்து ஹசரங்கா பந்திலும், சஞ்சு சாம்சன் 13 பந்துகளில் 7 ரன்களுக்கு தனஞ்ஜெயா பந்திலும் ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு, பவுண்டரிகள் போகவில்லை. நிதிஷ் ராணா கடைசி ஓவரில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.

Tags : Hasaranga
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT