செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை: ஹசரங்கா 2-ம் இடத்துக்கு முன்னேற்றம்

DIN


பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டி20 தரவரிசையில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா முதன்முறையாக 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவுடனான முதல் டி20 ஆட்டத்தில் வீழ்த்தியதன் பலனாக அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஐசிசி வாராந்திர தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம், ஜிம்பாப்வே-வங்கதேசம் டி20 சொடர், அயர்லாந்து-தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் கடைசி இரண்டு ஆட்டங்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. 

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் முதல் டி20யில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், அவர் 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைப் பிடித்துள்ளார். சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டு 21-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் வனிந்து ஹசரங்கா முதன்முறையாக 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கை வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா 37-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதுதவிர ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் முசாராபானி 37 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பேட்டிங்:

பேட்டிங்கில் இந்திய கேப்டன் ஷிகர் தவான் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் ரீசா ஹெண்ட்ரிக்ஸுடன் 29-வது இடத்தைப் பகிர்ந்துள்ளார். ஹெண்ட்ரிக்ஸும் 3 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தில் உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 9 இடங்கள் முன்னேறி 33-வது இடத்தையும், சூர்யகுமார் யாதவ் 25 இடங்கள் முன்னேறி 42-வது இடத்தையும் ஜிம்பாப்வேயின் வெஸ்லே மாதேவேர் 70-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT