செய்திகள்

ஆஸ்திரேலியாவின் அடுத்த பயணத் திட்டம் தயார்!

DIN


மேற்கிந்தியத் தீவுகளைத் தொடர்ந்து வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

ஆகஸ்ட் 3 மற்றும் 9 ஆகிய தேதிகளுக்கு இடையே அனைத்து ஆட்டங்களும் மிர்பூரில் நடைபெறுகின்றன.

2017-இல் 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடிய பிறகு ஆஸ்திரேலியா வங்கதேசம் செல்வது இது முதன்முறை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூலை 29-ம் தேதி டாக்கா சென்றடைகிறது. பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பு மூன்று நாள்களுக்கு வீரர்கள் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்.

செப்டம்பர் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரவுள்ள நிலையில் பெரும்பாலான அணிகள் டி20 தொடர்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. ஆஸ்திரேலிய அணியே இந்தத் தொடருக்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகளில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT