செய்திகள்

இந்திய டென்னிஸ் சங்கம் மீது ரோஹன் போபண்ணா குற்றச்சாட்டு

19th Jul 2021 04:05 PM

ADVERTISEMENT

 

ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவது பற்றி தவறாக வழிநடத்தியதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் மீது ரோஹன் போபண்ணா குற்றம் சாட்டியுள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு டென்னிஸ் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகலும் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - அங்கிதா ராணாவும் தகுதி பெற்றுள்ளார்கள். ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா - சுமித் நாகல் ஆகிய இருவரும் தகுதி பெறவில்லை.

எனினும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவது பற்றி தவறாக வழிநடத்தியதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் மீது ரோஹன் போபண்ணா குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் எங்களுடைய வாய்ப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. காயம், உடல்நலக்குறைவு போன்ற காரணங்களைத் தவிர ஜூன் 22 அன்று காலக்கெடு முடிந்தபிறகு எந்த ஒரு மாற்றமும் அனுமதிக்கப்படாது என்பதில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெளிவாக இருந்தது. ஆனால் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் - வீரர்கள், அரசாங்க, ஊடகம் போன்றவற்றைத் தவறாக வழிநடத்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT