செய்திகள்

பட்லர், மொயீன் அலி அசத்தல்: 2-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ)

19th Jul 2021 10:57 AM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

லீட்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் பட்லர் 59 ரன்களும் லிவிங்ஸ்டோன் 38 ரன்களும் மொயீன் அலி 36 ரன்களும் எடுத்தார்கள். எனினும் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 36 ரன்களும் 2 விக்கெட்டுகளும் எடுத்த மொயீன் அலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இங்கிலாந்தின் இந்த வெற்றியால் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT