செய்திகள்

இங்கிலாந்து தொடர்: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்

17th Jul 2021 06:37 PM

ADVERTISEMENT


இங்கிலாந்துடனான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறி லண்டனில் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். இதன்பிறகு, கடந்த 14-ம் தேதி மீண்டும் டர்ஹமில் அணி கூடியது.

வரும் 20-ம் தேதி கவுன்டி அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது இந்திய அணி. இதற்கான தீவிர வலைப் பயிற்சியில் வீரர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே ரிஷப் பந்த்-க்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பந்துவீச்சு நிபுணர் தயானந்த் கரானியுடன் தொடர்பிலிருந்ததால் ரித்திமான் சாஹாவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பயிற்சி ஆட்டத்தில் இவர்கள் சேர்க்கப்படவில்லையென்றால், கீப்பர் பொறுப்பை கேஎல் ராகுல் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Team India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT