செய்திகள்

கோபா அமெரிக்கா: பிரேசிலை வீழ்த்தி ஆர்ஜென்டீனா சாம்பியன்

11th Jul 2021 08:23 AM

ADVERTISEMENT


பிரேசிலுடனான இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஆர்ஜென்டீனா 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. பிரேசிலிலுள்ள மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரேசில் ஆக்ரோஷம் காட்டி வந்தது.

எனினும், 22-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா வீரர் ரோட்ரிகோ டி பால் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.

முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் விழாததால் ஆர்ஜென்டீனா 1-0 என முன்னிலை வகித்தது.

ADVERTISEMENT

2-வது பாதி ஆட்டத்தில் பிரேசில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் முதல் கோலுக்கு கடுமையாக முயற்சித்தார்.

எனினும், ஆர்ஜென்டீனா சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பிரேசில் அணியால் கூடுதல் நேரத்திலும் கோல் அடித்து சமன் செய்ய முடியவில்லை.

இதன்மூலம், ஆர்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.

கோபா அமெரிக்கா கோப்பையை ஆர்ஜென்டீனா வெல்வது இது 15-வது முறை. ஆர்ஜென்டீனாவுக்கு லயோனல் மெஸ்ஸி பெற்று தரும் முதல் பெரிய சர்வதேச கோப்பை இது.

Tags : Argentina
ADVERTISEMENT
ADVERTISEMENT