செய்திகள்

டி20 தொடர்: தென் ஆப்பிரிக்கா முன்னிலை

1st Jul 2021 04:14 AM

ADVERTISEMENT


சென்ட் ஜார்ஜஸ், ஜூன் 30: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் "த்ரில்' வெற்றி பெற்றது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகளின் சென்ட் ஜார்ஜஸ் நகரில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க வீரர் டப்ரைஸ் ஷம்ஸி ஆட்டநாயகன் ஆனார். 

முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸில் குவின்டன் டி காக் மட்டும் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் சேர்த்தார். எஞ்சியோரில் ராஸி வான் டெர் 32, எய்டன் மார்க்ரம் 23, ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 17 ரன்களுக்கு வீழ்ந்தனர். இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களிலோ, டக் அவுட்டாகியோ வெளியேறின. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஆபெட் மெக்காய் 4, டுவைன் பிராவே 3 விக்கெட் சாய்த்தனர். 

ADVERTISEMENT

பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகளில் எவின் லீவிஸ் மட்டும் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்கள் சேர்த்தார். நிகோலஸ் பூரன் 26, ஆன்ட்ரே ரஸ்ùஸல் 25, லென்டல் சிமோன்ஸ் 22 ரன்கள் அடிக்க, எஞ்சிய வீரர்கள் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் குறைந்த ரன்களில் விக்கெட்டை இழந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே, டப்ரைஸ் ஷம்ஸி தலா 2 விக்கெட்டுகள் சேர்த்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT