செய்திகள்

லார்ட்ஸ் மைதானத்தில் 100% ரசிகர்களுக்கு அனுமதி!

1st Jul 2021 05:23 PM

ADVERTISEMENT

 

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டத்தில் 100% ரசிகர்கள் அனுமதியளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை அன்றும் டி20 தொடர் ஜூலை 16 அன்றும் தொடங்குகின்றன. 

சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்டில் 70% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். நான்கு நாள் இடைவெளியில் 60,000 ரசிகர்கள் வருகை தந்தார்கள். பிர்மிங்ஹம்மில் நடைபெறவுள்ள இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 80% ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். அந்த ஆட்டத்துக்கு 19,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 100% ரசிகர்கள் அனுமதியளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் ஆரம்பித்த பிறகு இங்கிலாந்தில் அதிகம் பேர் நேரில் பார்த்த கிரிக்கெட் ஆட்டமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் செப்டம்பர் 2019-க்குப் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தை நேரில் காண வரும் 11 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்கள் - கரோனா இல்லை என்கிற பரிசோதனை சான்றிதழ் அல்லது இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட சான்றிதழ் என இரண்டில் ஒன்றைக் காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT