செய்திகள்

தொடக்க வீரர் ஷுப்மன் கில்லுக்குக் காயம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பாரா?

1st Jul 2021 01:56 PM

ADVERTISEMENT

 

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டெஸ்ட் உலக சாம்பியன் ஆனது நியூசிலாந்து அணி. இதையடுத்து ஆகஸ்ட் 4 முதல் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

இந்நிலையில் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கும் முதல் டெஸ்டில் ஷுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. இதனால் மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்கு முதல் டெஸ்டில் தொடக்க வீரராகக் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என அறியப்படுகிறது. காயத்திலிருந்து விரைவில் குணமடைந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில்லால் பங்கேற்க முடியுமா என்பது இனிமேல் தான் தெரியவரும். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT