செய்திகள்

பிரதமர் மோடியின் வார்த்தைகள் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும்: ரவி சாஸ்திரி

31st Jan 2021 04:54 PM

ADVERTISEMENT


பிரதமர் நரேந்திர மோடியின் ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்க்கும் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில், அணியின் கடின உழைப்பும், அணியாக செயல்பட்ட விதமும் எழுச்சியூட்டும் விதமாக இருந்ததாக பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி உள்ளிட்டோர் சுட்டுரைப் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளனர்.

ரவி சாஸ்திரி:

ADVERTISEMENT

"நன்றி ஐயா. உங்களது அன்பான வார்த்தைகள் இந்திய அணியையும், கடினமான சூழலில் செயல்படுவதற்கான உறுதித் தன்மையையும் மேலும் பலப்படுத்தும். ஜெய் ஹிந்த்."

சௌரவ் கங்குலி:

"ஆஸ்திரேலியாவில் இந்தியக் கிரிக்கெட் அணியின் செயல்பாட்டை அங்கீகரித்த பிரமதருக்கு மனமார்ந்த நன்றி."

கடைசி 3 டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் அஜின்க்யா ரஹானே பதிவிட்டது:

"ஊக்கமளிக்கும் உங்களது வார்த்தைகளுக்கு நன்றி. இந்திய அணிக்காக விளையாடுவது எப்போதுமே பெருமை."

Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT