செய்திகள்

பிரபல வீரர் பொலார்ட் விபத்தில் பலியா?: வதந்தியால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

30th Jan 2021 10:57 AM

ADVERTISEMENT

 

மேற்கிந்திய வீரர் பொலார்ட் விபத்தில் மறைந்து போனதாக ஒரு தவறான செய்தி வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். 

33 வயது பொலார்ட், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 113 ஒருநாள், 76 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மேலும் 531 டி20 ஆட்டங்களில் விளையாடி மகத்தான டி20 வீரராகவும் அறியப்படுகிறார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட நாளாக விளையாடி வருவதால் இந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் கார் விபத்தில் பொலார்ட் பலியானதாக வதந்தி ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவியது. யூடியூபில் இதுதொடர்பாக விடியோவும் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். எனினும் இது வதந்தி என்பதை ரசிகர்கள் பிறகு அறிந்துகொண்டார்கள். தவறான செய்தியைச் சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம் எனப் பல ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். 

ADVERTISEMENT

பொலார்ட் தற்போது அபுதாபி டி10 போட்டியில் விளையாடி வருகிறார். டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி வருகிறார். இன்று கூட இன்ஸ்டகிராமில் அவர் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT