கேரளத்தில் புதிதாக 6,282 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை 59,759 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 10.51 சதவிகிதம்.
மேலும் 7,032 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 18 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 3,722 ஆக உயர்ந்துள்ளது.
71,469 பேர் இன்னும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,17,434 பேர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் கடந்தாண்டு இதே தினம்தான் முதல் கரோனா பாதிப்பு பதிவானது குறிப்பிடத்தக்கது.