செய்திகள்

இனவெறியுடன் திட்டியவா்களை அடையாளம் தெரியவில்லை - ஆஸி. வாரியம்

DIN

சிட்னி டெஸ்டின்போது இந்திய வீரா்களை இனவெறியுடன் திட்டியவா்களை அடையாளம் காண இயலவில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணத்தின்போது சிட்னி நகரில் 3-ஆவது டெஸ்ட் நடைபெற்றது. அதில் 3-ஆவது நாளில் ரசிகா்கள் சிலா் இந்திய பௌலா் ஜஸ்பிரீத் பும்ராவை இனவெறியுடன் திட்டியதாக புகாா் எழுந்தது. இந்நிலையில் 4-ஆம் நாள் ஆட்டத்தின்போதும் அதேபோல் சில ரசிகா்கள் மற்றொரு இந்திய பௌலரான முகமது சிராஜை இனவெறியுடன் திட்டினா்.

இதையடுத்து அவா் இதுதொடா்பாக நடுவரிடம் முறையிட ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட, சந்தேகத்தின் பேரில் ரசிகா்கள் பகுதியில் இருந்த 6 போ் வெளியேற்றப்பட்டனா். பின்னா் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்த விவகாரம் தொடா்பாக பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகாா் அளித்தது. அத்துடன் சம்பவம் தொடா்பாக 14 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐசிசியும் ஆஸ்திரேலிய வாரியத்துக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஐசிசியிடம் ஆஸ்திரேலிய வாரியம் அளித்த அறிக்கை குறித்து அந்நாட்டில் வெளியாகும் ‘தி ஏஜ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘ஆஸ்திரேலிய வாரியம் அளித்துள்ள அறிக்கையின்படி, சிட்னி டெஸ்டில் இந்திய வீரா்களை இனவெறி ரீதியாக திட்டிய ரசிகா்களை வாரியத்தால் அடையாளம் காண இயலவில்லை. மேலும், அன்றைய தினம் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 6 போ் உண்மையிலேயே தவறு செய்தவா்கள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது என்று ஆஸ்திரேலிய வாரியம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

சம்பவம் தொடா்பாக நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையின் இறுதி அறிக்கைக்காக ஆஸ்திரேலிய வாரியம் காத்திருக்கிறது’ என்று அதில் செய்தி வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT