செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர்: டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் நீக்கம்

27th Jan 2021 12:04 PM

ADVERTISEMENT

 

தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 1-2 எனத் தோற்றது ஆஸ்திரேலிய அணி. அடுத்ததாக ஒரே சமயத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்கிறது. நியுசிலாந்தில் 5 டி20 ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்காவில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது.

இதற்கான டெஸ்ட் மற்றும் டி20 அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஆஸி. டெஸ்ட் அணியிலிருந்து மேத்யூ வேட் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேத்யூ வேட், டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

ஆஸி. டெஸ்ட் அணி: டிம் பெயின் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், ஷேன் அபாட், அலெக்ஸ் கேரி, கேம்ரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஹென்ரிகஸ், மார்னஸ் லபுசேன், நாதன் லயன், மைக்கேல் நசீர், ஜேம்ஸ் பேட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்க் ஸ்டகெடீ, மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர். 

Tags : Wade Australia Test squad
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT