செய்திகள்

சென்னையில் பிப்ரவரி 18-ல் நடைபெறும் ஐபிஎல் ஏலம்: பிசிசிஐ அறிவிப்பு

27th Jan 2021 01:40 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18 அன்று நடைபெறவுள்ளது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரா்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு கடந்த 20-ஆம் தேதியோடு முடிவடைந்தது. புதிய வீரா்களை தோ்வு செய்யும் விதமாக 8 அணிகளும் தங்கள் வசமிருந்த வீரா்கள் பலரை விடுவித்துள்ளன. சிஎஸ்கே அணியிலிருந்து முரளி விஜய், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் (ஓய்வு) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18 அன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என்பதே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியோ, ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதாக தொடா்ந்து கூறி வருகிறாா்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. அந்தத் தொடா் சுமுகமாக முடிவடையும்பட்சத்தில், ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான வழி ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Tags : IPL 2021 Player Auction
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT