செய்திகள்

சிறந்த வீரருக்கான விருதை மாதந்தோறும் வழங்க ஐசிசி முடிவு

27th Jan 2021 03:54 PM

ADVERTISEMENT

 

சிறந்த வீரருக்கான விருதை மாதந்தோறும் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களை மாதந்தோறும்  கெளரவிக்கவுள்ளது ஐசிசி. இணையத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் வழியாக சிறந்த வீரர், வீராங்கனைகளை ரசிகர்களும் தேர்வு செய்யலாம். முன்னாள் வீரர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து சிறந்த கிரிக்கெட் வீரர், வீரர்களை மாதந்தோறும் தேர்வு செய்வார்கள் என்றும் ஐசிசி ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. 

முதல் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் அஸ்வின், ரிஷப் பந்த், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், டி. நடராஜன் ஆகிய இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

ADVERTISEMENT

கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த வீரர்களை சமீபத்தில் அறிவித்தது ஐசிசி.  சா்வதேச ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக எம்.எஸ். தோனி தோ்வு செய்யப்பட்டார். அதேபோல் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக விராட் கோலி தோ்வானார். இதையடுத்து சிறந்த வீரருக்கான விருதை மாதந்தோறும் வழங்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. 
 

Tags : ICC Player of the Month
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT