செய்திகள்

107 வருடங்கள் கழித்து வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 5 டெஸ்டுகளை வென்றுள்ள இங்கிலாந்து அணி!

DIN

இலங்கைக்கு எதிரான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

முன்னதாக, காலேவில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய 2-ஆவது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்கள் விளாச, இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 186 ரன்கள் விளாச, இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 126 ரன்களுக்குச் சுருண்டது. லசித் எம்புல்தெனியா மட்டும் அதிகபட்சமாக 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்கள் சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ், ஜேக் லீச் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் 164 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 43.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வென்றது. டாம் சிப்லி 2 பவுண்டரிகளுடன் 56, பட்லா் 5 பவுண்டரிகளுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா 3, ரமேஷ் மெண்டிஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.

ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த இங்கிலாந்து, தற்போது தொடரை கைப்பற்றியுள்ளது. காலே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தொடா் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டாா்.

இந்நிலையில் 107 வருடங்கள் கழித்து வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 5 டெஸ்டுகளை வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. 1911 முதல் 1914 வரை இங்கிலாந்து அணி வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 7 டெஸ்டுகளை வென்றது. தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்டுகளிலும் வென்றது. கடந்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய மூன்று டெஸ்டுகளையும் வென்ற இங்கிலாந்து அணி தற்போது இலங்கையில் விளையாடிய 2 டெஸ்டுகளிலும் வெற்றி கண்டுள்ளது. 

அதேபோல இலங்கையில் தொடர்ச்சியாக 6 டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 2012-ல் ஒரு டெஸ்டும் 2018-19-ல் 3 டெஸ்டுகளிலும் வென்ற இங்கிலாந்து அணி தற்போது 2 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT