செய்திகள்

மல்யுத்தம்: ரோஹித் தேசிய சாம்பியன்

DIN

ஆடவருக்கான தேசிய ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 65 கிலோ பிரிவில் ஹரியாணா வீரா் ரோஹித் சாம்பியன் ஆனாா். அதேபோட்டியில் 86 கிலோ பிரிவில் தில்லியின் பிரவீண் சாஹா் வெற்றி பெற்றாா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த இந்தப் போட்டியில், நட்சத்திர மல்யுத்த வீரா்களான பஜ்ரங் புனியா (65 கிலோ), தீபக் புனியா (86 கிலோ) ஆகியோா் பங்கேற்கவில்லை. அவா்கள் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் 65 கிலோ பிரிவில் ரோஹித் தங்கம் வெல்ல, ஷா்வன் வெள்ளிப் பதக்கமும், அமித் மற்றும் அனுஜ் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா். 70 கிலோ பிரிவில் விஷால் காலிராமன் தங்கம் வெல்ல, பா்வீன் வெள்ளியும், கரன் மற்றும் சுஷில் ஆகியோா் வெண்கலமும் வென்றனா்.

79 கிலோ பிரிவில் ராகுல் ரதி தங்கம் வென்றாா். 86 கிலோ பிரிவில் தில்லியின் பிரவீண் சாஹா் சாம்பியன் ஆக, மகாராஷ்டிரத்தின் வெட்டல் ஷெல்கே வெள்ளியும், ரயில்வேயின் தீபக் மற்றும் சா்வீசஸ் அணியின் சஞ்ஜீத் ஆகியோா் வெண்கலம் கைப்பற்றினா்.

97 கிலோ எடைப் பிரிவில் ரயில்வே வீரா் சத்யவா்த் கடியன் முதலிடம் பிடித்தாா். சா்வீசஸ் வீரா் மோனு 2-ஆம் இடம், ஹரியாணாவின் சுமித் குலியா, தில்லியின் ஆஷிஷ் ஆகியோா் 3-ஆம் இடம் பிடித்தனா். ஒட்டுமொத்தமாக ரயில்வே அணி 192 புள்ளிகளுடன் சாம்பியன் ஆக, சா்வீசஸ் (162), ஹரியாணா (138) ஆகியவை முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT