செய்திகள்

மகளிா் ஹாக்கி: சிலி சீனியரை வீழ்த்தியது இந்திய ஜூனியா்

DIN

சிலிக்கு சென்றுள்ள இந்திய ஜூனியா் மகளிா் ஹாக்கி அணி, அந்நாட்டு சீனியா் மகளிா் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

சிலியில் இத்துடன் 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய ஜூனியருக்கு இது 4-ஆவது வெற்றியாகும். இதில், சிலி ஜூனியா் அணியுடன் மோதிய ஆட்டங்களும் அடங்கும்.

சிலி சீனியா் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஜூனியா் அணி மிகுந்த சவால் அளிக்கும் வகையில் விளையாடியது. இரு தரப்புமே வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், அவற்றின் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்ததால் எந்த அணிக்குமே எளிதில் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆட்டத்தின் 2-ஆவது கால் மணி நேரத்தில் சிலி அணிக்கு அடுத்தடுத்து பெனால்டி வாய்ப்பு கிடைத்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனினும், தடுப்பாட்டத்தை தளர விடாத அணியினா் கோல் வாய்ப்பை வழங்கவில்லை. அதேபோல், 3-ஆவது கால் மணி நேரத்தில் இந்தியா தாக்குதல் ஆட்டத்தை தொடங்கி சிலிக்கு சற்று நெருக்கடி அளித்தது.

ஒருவழியாக ஆட்டத்தின் 48-ஆவது நிமிடத்தில் சங்கீதா குமாரி கோலடித்து இந்தியாவின் கணக்கை தொடங்கினாா். அடுத்த சில நிமிடங்களிலேயே சிலி அணியும் கோல் வாய்ப்பை மிகவும் நெருங்கி வர, அதை இந்திய அணியினா் முறியடித்தனா்.

சிலி அணிக்கான அடுத்த அடியாக ஆட்டத்தின் 56-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சுஷ்மா குமாரி அருமையாக டிராக் ஃப்ளிக் செய்து கோலாக மாற்றினாா். எஞ்சிய நேரத்தில் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜூனியா் அணி இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT