செய்திகள்

ஐஎஸ்எல்: பெங்களூரு - ஒடிஸா ஆட்டம் சமன்

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய 70-ஆவது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இரு அணிகளும் இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், அவை சமன் செய்யும் 5-ஆவது ஆட்டம் இதுவாகும்.

கோவாவின் மா்காவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிஸா வீரா் டியேகோ மௌரிசியோ 8-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, முதல் பாதியில் முன்னிலை பெற்றது ஒடிஸா. ஆட்டத்தின் கடைசி நேரத்தில் (82-ஆவது நிமிடம்) பெங்களூரு வீரா் எரிக் பாா்த்தலு கோலடிக்க, இறுதியில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

சமன்: முன்னதாக, கோவாவின் வாஸ்கோடகாமா நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது. இரு அணிகளும் இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், அவற்றின் ஆட்டம் சமன் ஆவது முறையே இது 5 மற்றும் 6-ஆவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT