செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இயக்குநராக சங்கக்காரா நியமனம்

24th Jan 2021 05:02 PM

ADVERTISEMENT


வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி முறை, ஏலத்துக்கான திட்டங்கள் மற்றும் அணியின் வியூகங்கள், திறமையாளர்களைக் கண்டறிவது மற்றும் மேம்படுத்துவது இதுதவிர நாக்பூரிலுள்ள ராயல்ஸ் அகாடமியை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றின் மேற்பார்வை சங்கக்காராவின் பொறுப்புகள் என அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனம் பற்றி சங்கக்காரா தெரிவித்தது:

"ராஜஸ்தான் ராயல்ஸுடன் இணைவது பெருமைக்குரியது. புதிய சவால்களை எண்ணி ஆர்வமாக உள்ளேன். உலகின் முன்னணி போட்டிகளில் ஒன்றான ஐபிஎல்-இல் ஒரு அணியின் கிரிக்கெட் வியூகங்கள், வளர்ச்சித் திட்டங்கள், எதிர்காலத்தில் களத்தில் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைப்பதற்கான கிரிக்கெட் உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை மேற்பார்வையிடுவது எனக்கு கிடைத்த வாய்ப்பு. இது என்னை ஊக்கப்படுத்தியது.

ADVERTISEMENT

சமீபத்தில் அணியின் தலைமைக் குழுவிடம் பேசியது உண்மையில் சுவாரஸ்யமாக இருந்தது. அதற்காகக் காத்திருக்க முடியவில்லை. அணியில் உலகின் தலைசிறந்த வீரர்கள் மற்றும் சிறந்த மனிதர்கள் உள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கும்."

குமார் சங்கக்காரா இலங்கைக்காக 28,000 ரன்களைக் குவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் 4 சீசன்களில் தொடர்ச்சியாக 300-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். மொத்தம் 71 ஐபிஎல் ஆட்டங்களில் 1,687 ரன்கள் குவித்துள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அணி நிர்வாகம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajasthan Royals
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT