செய்திகள்

ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்திய அணி: பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி மனஉறுதியுடன் போராடி சவாலை வென்றதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடைசி நாளன்று கடினமான இலக்கை விரட்டி டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி. 

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. 4-வது டெஸ்டில் கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது. 

அஸ்ஸாமில் தேஜ்பூா் பல்கலைக்கழகத்தின் 18-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் இருந்து காணொலி வழியாக உரையாற்றினார். அப்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடர் வென்றதைக் குறிப்பிட்டு மோடி பேசியதாவது:

ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பல்வேறு சவால்களைச் சந்தித்தது. மோசமான தோல்வியைச் சந்தித்தாலும் விரைவாக மீண்டெழுந்து, அடுத்த டெஸ்டை ஜெயித்தார்கள். காயங்கள் ஏற்பட்டபோது மனஉறுதியை வீரர்கள் வெளிப்படுத்தினார்கள். கடினமான சூழலில் பின்வாங்காமல் சவால்களுக்கான விடைகளைத் தேடினார்கள். 

வீரர்களுக்கு அனுபவமில்லாமல் இருந்தபோதும் ஆர்வத்துடன் விளையாடி கிடைத்த வாய்ப்புகளில் திறமையை வெளிப்படுத்தினார்கள். சிறந்த அணியை திறமை மற்றும் மனஉறுதியால் வென்றார்கள். புதிய இந்தியா நம்பிக்கையுடன் லட்சியத்தை எதிர்கொள்கிறது. கிரிக்கெட் ஆடுகளத்தில் மட்டுமல்ல மாணவர்களான உங்களிடமும் இந்த எண்ணம் தென்படுகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT